ஓடத்துறை ஊராட்சி தலைவராக எம்.ஜி.பாலமுருகன் பதவி ஏற்பு

ஓடத்துறை ஊராட்சி தலைவராக எம்.ஜி.பாலமுருகன் பதவி ஏற்புஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம்,ஓடத்துறை ஊராட்சியில் தலைவராக எம்.ஜி.பாலமுருகன் பதவி ஏற்பு விழா ஓடத்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம்  தலைமை ஏற்க பவானி ஒன்றிய செயலாளர் கே.சி.துரைராஜா முன்னிலை வகிக்க பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இதில் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் ஓடத்துறை ஊராட்சி ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.