ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் பணிகளை பார்வையிடும் அதிகாரிகள்ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் பணிகளை பார்வையிடும் அதிகாரிகள் 

 


 

ஈரோடு மாவட்டம் பவானி வரத நல்லூர் பகுதியில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. பகுதியிலிருந்து ஈரோட்டிற்கு காவிரி நீரை எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணியினை பாஸ்கரன் நகராட்சி நிர்வாக ஆணையர் பார்வையிட்டு பணிகளை விரைவில் முடித்து ஈரோடு மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக அங்கு நடை பெற்று வரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென்றும் மார்ச்சு மாதம் ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் திறக்கப்பட உள்ள நிலையில் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவருடன் அசோகன் துணை நகராட்சி நிர்வாக ஆணையர், புகழேந்தி தலைமை பொறியாளர், திருமாவளவன் மேற்பார்வை பொறியாளர், முருகேசன் மண்டல பொறியாளர் ஈரோடு வெங்கடேசன் மண்டல பொறியாளர் திருப்பூர், தங்கவேல் செயற்பொறியாளர் பொன்னுசாமி உதவி நிர்வாக பொறியாளர் விஜயகுமார் உதவி நிர்வாக பொறியாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்