அம்மா இளைஞர்கள் விளையாட்டு திட்டம் துவக்கம்!

அம்மா இளைஞர்கள் விளையாட்டு திட்டம் துவக்க விழா தலைமைச்செயலகத்தில்  நடைபெற்றது.


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த புதிய திட்டத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கிலாய் கிராம ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது இதன் துவக்க விழா நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளிக் காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து துவங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலாளர் சண்முகம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அரசு முதன்மை செயலாளர்   திரஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மேலும் உள்துறை, வேளாண்மைத்துறை,தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான திட்டங்களையும் துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.