செங்கோட்டை - சென்னை செல்லும்  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும்!!

செங்கோட்டை - சென்னை செல்லும்  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார் கோரிக்கை .


தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-  சென்னை  எழும்பூரிலிருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரயிலில் படுக்கை வசதிக்கு தினமும் 150 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனை தவிர்க்கவும். 


பொது மக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும்  சென்னை செங்கோட்டை இடையே வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட வேண்டும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து காலை 6 மணிக்கும்இ செங்கோட்டையிலிருந்து அதிகாலை 5 மணிக்கும் மதுரைஇ திருச்சிஇ விருதாச்சலம்இ விழுப்புரம் வழியாக இயக்கப்பட வேண்டும்.  இவ்வாறு கோரிக்கை மனுவில் எம்.பி., தனுஷ்  எம்.குமார் கூறியுள்ளார் .