முன் விரோதம் காரணமாக டி.எஸ்.பி., தொல்லை செய்கிறார் : இன்ஸ்பெக்டர் குமுறல்

முன் விரோதம் காரணமாக  காவல் துணை கண்காணிப்பாளர்  தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக ஆய்வாளர் குமுறல்.!


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையம் ஆய்வாளர்   குமுறல். ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் பழைய முன் விரோதம் காரணமாக தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.


தொடர்ந்து இதுபோல் தொந்தரவு கொடுத்து வந்ததால் இன்று 21.01.2020 கடுமையான மனஉளைச்சல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பொதுநாள் குறிப்பில் தனது குமுறலை மூன்று பக்க அளவில் எழுதிவைத்து விட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி காவல்துறையினர் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.