தமிழன் மட்டுமல்ல... தமிழன் வளர்க்கும் காளையும் பெண்களை தாக்குவதில்லை!!!


 


மஞ்சு விரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை பாய்ந்து வரும்போது, குறுக்கே நின்ற தாய், குழந்தையை  தாண்டி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியை காண அதிக அளவில் குடும்பத்துடன் வந்துருந்தனர். 
இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தொழுவில் காளைகள்  அவிழ்ப்பதற்கு முன்பாகவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக வயல்வெளி மற்றும் கண்மாய், உள்பட நின்ற இடங்களில் எல்லாம்  அவிழ்த்து விடுவார்கள். இதனால் அந்த பகுதியே ஆவேச போர்க்களமாக இருக்கும். அதைக் காண கூட்டம் கூட்டமாக மக்கள் வருவார்கள்.
தாறுமாறாக அவிழ்த்து விடும் காளைகள் பார்வையாளர்களுக்கு புகுந்து  காயங்களை ஏற்படுத்தும்.
இப்படி நேற்று நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தநர்.
ஆட்டோவில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட முரட்டு   காளை  ஒன்று பாய்ந்து சென்றது. அது ஒரு பெண் குழந்தையும் kaiyumaka எதிரில்  நிற்பதை கண்டதும், அனைவருமே அந்த பெண்ணை குத்தி தூக்கி விடும் என்று பயந்தார்கள். ஆனால் குடும்பத்தை நோக்கி ஆவேசமாக வந்த காளை  எதிரில் வந்த தாய் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்றது. இந்த காட்சி, ' தமிழன் மட்டுமல்ல., தமிழன் வளர்க்கும் காளையும் பெண்களை தாக்குவதில்லை என்ற வசனத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது