பழனி ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு  காவல்துறையினர் சார்பாக ரோஜா மலர் வழங்கப்பட்டது.

 


 

தமிழகம் முழுவதும் 31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பழனியில் ஹெல்மட் பற்றியான விழிப்புணர்வு ஊர்வலம் வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம் என பல நிகழ்ச்சிகள் பழனி காவல் துறை சார்பாக நடத்தப்பட்டது

 சாலையில் வரும் பொதுமக்களுக்கு பழனி சரக  காவல்துறை  கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும்  நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார்  போக்குவரத்துக் காவல்ஆய்வாளர் ராஜன் பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சையது பாபு ஆயக்குடி காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி பழனி கீரனூர் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை

 சார்பு ஆய்வாளர்கள் ரஞ்சித் குமார், பஞ்சலட்சுமி, கோமதி,ஆகியோர் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு ரோஜா மலர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

அப்போது தலைகவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

இருசக்கர வாகனத்தில் செல்வோர், ஹெல்மெட் அணிந்தே பயணிக்க வேண்டுமென, ரோஜா பூ வழங்கி சற்று பொதுமக்களை சிந்திக்க வைத்தனர் பழனி காவல்துறை இதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையின் இந்த செயலை கண்டு தானாக முன்வந்து ஹெல்மட் அணியும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.