வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கநதசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை 8ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பு வார நாட்களில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல்   மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டித் தேர்விற்கு தயாராகும் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.