போர் எப்போது வந்தாலும் ராணுவம் தயார்!!

போர் எப்போது வந்தாலும் இந்திய ராணுவம் தயார் : முப்படைத் தளபதி பிபின் ராவத் உறுதி. போர் எப்ப்போது வந்தாலும் ராணுவம் தயார்நிலையில் இருப்பதாக, முப்படைத் தளபதி திரு.பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.


தென்னிந்திய படைத்தளத்தில் முதன்முறையாக பிரமோஸ் ஏவுகணைகளை தாங்கிய சுகோய் 30 ரக போர் விமானங்கள் தஞ்சை விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டன. முழு நேர விமானப்படைத்தளமாக தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த விழாவில் முப்படைகளின் தளபதி திரு.பிபின் ராவத், விமானப்படை தலைமை தளபதி .ஆர்.கே பதோரியா, தென்னிந்திய விமானப்படை தளபதி திரு.அமித் திவாரி உள்ளிட்ட விமானப் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பி


பின்னர்ய்தியாளர்களிடம் பேசிய திரு.பிபின் ராவத், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கான கருவிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ராணுவத்தில் சேருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய படைகளின் மீது முழுமையான நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.


பாகிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக போர் வருவதற்கான வாய்ப்புள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிபின் ராவத், போர் வருவதை கணிப்பது கடினம் என்றும், எப்போதும் தயாராக இருக்க வேண்டியது ராணுவத்தின் கடமை என்றும், அந்த அடிப்படையில் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்


Previous Post Next Post