பிரமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஃபிரண்ட்லைன்  பள்ளி மாணவன் தேர்வு


பாரத பிரதமருடன்  கலந்துரையாடல்  நிகழ்ச்சி 20. 01. 2020 அன்று  டெல்லியில் நடைபெற உள்ளது .  இந்நிகழ்ச்சியில் திருப்பூர்  ஃபிரண்ட்லைன் மிலேனியம்  பள்ளியைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு  மாணவர்,  கே.சஞ்சய் செல்வம் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பாக அகில இந்திய அளவில் நடைபெற்ற பரிக்ஷா பே சார்சா 2020 என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி  இந்த வாய்ப்பினை  பெற்றுள்ளார் . போட்டியில் வெற்றி  பெற்று  இந்த அரிய வாய்ப்பை பெற்ற மாணவனை, பள்ளியின்  தாளாளர்  டாக்டர். சிவசாமி, செயலாளர்  டாக்டர். சிவகாமி  மற்றும்  இயக்குனர்  சக்திநந்தன்,  துணை  செயலாளர்   வைஷ்ணவி   நந்தன்  மற்றும்  முதல்வர்,  துணை  முதல்வர்  ஆகியோர்  வாழ்த்தி தங்களது  பாராட்டுகளை  தெரிவித்தனர்.