அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்து இடங்களிலும் தி.மு.க வெற்றி பெறும்

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்து இடங்களிலும் தி.மு.க வெற்றி பெறும்அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்து இடங்களிலும் தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று தி.மு.க மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன்  பேசினார். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேதுரவிக்குமார் வரவேற்றார். சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழிதிருமாவளவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் கூட்டத்தில் பேசுகையில், அடுத்து தமிழகத்தில் அமையப்போவது தி.மு.க தலைமையிலான கட்சி ஆகும். அதற்கான முதற்படிக்கான இந்த உள்ளாட்சி தேர்தல் இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிரமாக இருந்து கண்காணிக்க வேண்டும் என்றார். மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட  துணை  செயலாளர்  டி.  சத்தியேந்திரன் ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமாறன், மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.