பொங்கலுக்கு வீடு சுத்தம் செய்த போது பரிதாபம்: குளத்தில் தவறி விழுந்து இரு குழந்தைகள் பலி!

ராணிப்பேட்டை, 
பாணாவரம் அடுத்த மேலேரி குளக்கரை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற முணுசாமி. இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி சுகன்யா,  இவர்களுக்கு ஹரினி வயது 4,  என்ற மகளும் தர்ஷன் இரன்டரை வயது,  என்ற மகனும் உள்ளனர்.


ஹரினி அங்குள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக கணவன் மனைவி இருவரும் வீட்டை சுத்தம் செய்து வந்தனர். அப்போது அக்காள் ஹரிணி தம்பி தர்ஷன் ஆகிய இருவரும் வீட்டுக்கு அருகே உள்ள குளக்கரையில் விளையாடிக் கொண்டிருத்தாகவும் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நிரில் முழ்கினர்.


அப்போது அந்த வழியாக சென்றவர்கள் குளத்தில் குழந்தை மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்குள்ளவர்கள் குளத்தில் இறங்கி மிதந்த குழந்தை மற்றும்  அடியில் இருந்த குழந்தையை மீட்டு நெமிலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


குழந்தைகளை பரிசோதித்த டாக்டர் குழந்தைகள் இதற்கு முன்னதாக இறந்ததாக தெரிவித்தனர். பின்னர் குழந்தைகளின் சடலத்தை மேலேரியில் உள்ள விட்டிற்க்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலிசார் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்