ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டின் புதிய "ஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட்" அறிமுகம்!

ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டின் புதிய "ஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட்" அறிமுகம் செய்தது .



ஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட்' என்னும் புதிய திட்டத்தை ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் அறிவித்துள்ளது. இந்த பண்டில் முதலீட்டாளர்கள் ஜனவரி 22-ந்தேதி முதல் முதலீடு செய்யலாம். இது பிப்ரவரி 5-ந்தேதியோடு நிறைவடைகிறது.
நிறுவனங்களின் பாரம்பரியம், தரம், வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பண்டின் பணம் முதலீடு செய்யப்பட உள்ளது. இது குறித்து ஆக்சிஸ் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்திரேஷ் குமார் நிகாம் கூறுகையில், தரம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய தத்துவத்தின் அடிப்படையில் இஎஸ்ஜி பண்ட் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நிதி அளவீடுகளுடன் இஎஸ்ஜி பகுப்பாய்வை இணைப்பதன் மூலம், எங்கள் போர்ட்போலியோவில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் பற்றிய முழுமையான புரிதலைக் கொண்டு வர முடியும்.


அத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட் அதன் முதலீட்டாளர்களுக்கு வளமான ஆதாரத்தை வழங்குவதற்கான வலுவான ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.புதிய பண்ட்டில் முதலீட்டாளர்கள் ஜனவரி 22-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி முதலீடு செய்யலாம். இதற்கான தலைமை ஈக்விட்டி அதிகாரியாக ஜினேஷ் கோபானி, நிதி மேலாளராக ஹிதேஷ் தாஸ் ஆகியோர் உள்ளனர். இந்த பண்டை ஆக்சிஸ் சொத்து மேலாண்மை நிறுவனம் நிர்வகிக்க உள்ளது என்று தெரிவித்தார்.சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் சரியான பதிலளிப்பு ஆகியவை தற்போதைய வர்த்தகத்தில் மிகப்பெரும் சவாலாக உள்ளன. இருப்பினும் பல வணிக நிறுவனங்கள் கடினமான நிதி செலவு மற்றும் நன்மை தரக்கூடிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. தேவையில்லாத செலவுகளை புறக்கணிக்கின்றன.


இருந்தபோதிலும் பல விஷங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகி வருகிறது. மேலும் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், அரசு மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சமூகம் ஆகியவை வணிக முடிவு எடுப்பதில் நிலைத்தன்மைக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றன. .இது போன்ற சிக்கல்களை முதலீட்டு மேலாளர்கள் விரிவான முறையில் கையாளுவதற்கு ஏற்ற வகையில் இஎஸ்ஜி பண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஎஸ்ஜி என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை காரணிகளை குறிக்கிறது. இந்த கட்டமைப்பை ஒவ்வொரு முதலீட்டு மேலாளர்களும் தங்கள் கவரேஜில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் அல்லது இந்த காரணிகளுக்கு ஏற்ப அந்நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய பயன்படுத்துகிறார்கள்.




.


Previous Post Next Post