பவானி அருகே போலியோ சொட்டு மருந்து முகாம்!!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் அனைத்து பகுதியில் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் பகுதியில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே சி கருப்பன் அவர்கள் துவக்கி வைத்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார் பின்னர் வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் விளையாட்டு பொம்மைகளும் இனிப்புகள் வழங்கினார்.