துப்பாக்கி சூட்டில் இறந்த எஸ்.ஐ., உடலை தூக்கி சென்ற ஐ. பி.எஸ்., அதிகாரி - நெஞ்சை உருக்கும் சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரை தோளில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த மாவட்ட S P. ஸ்ரீநாத் கன்னியாகுமரி மாவட்டம் 
தமிழக -கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அன்னாரது இறுதி சடங்கு மார்த்தாண்டம் பகுதியில் அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் வில்சன் அவர்களது உடலை நல்லடகத்திற்காக சுமந்து சென்றார்.மேலும் குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது.