சாராயம் விற்கும் சாமானிய பெண்கள: வாட்ஸ் அப் வீடியோவால் அலறும் போலீஸ் !!!
பொங்கலுக்கு ஆம்பூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கொடிகட்டி பறக்கும் கள்ளச்சாராய வியாபாரம்.  

 


 

கள்ளச்சாராயத்தை வீட்டில் உள்ள  பெண்களே விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார் குப்பம், மோட்டூர், சின்னபள்ளிகுப்பம், மேல் சான்றோர் குப்பம், ஆகிய கிராமங்களில் பகலிரவு பாராமல் வயல் வெளிகளிலும் வீடுகளிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான இக்கிராமத்தில் பெண்களே கள்ளச்சாராயம் விற்பனை செய்து வரும் வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவதால் இவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து உள்ளனர்.

 

 
 

4 Attachments