காளைகள், காளையர்களின் பாய்ச்சலுக்கு தயாராகும் பாலமேடு!!

 


மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகிற 16 ஆம் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.


ஜல்லிக்கட்டு மாடுகள் நிற்கும் இடங்கள், வெளியேறி சென்று போகும் மைதானப்பகுதிகள், தடுப்பு கம்புகள் கட்டும் இடங்கள், வாடி வாசலை விட்டு வெளியேறி செல்லும் மாடுகளை மாட்டின் உரிமையாளர்கள் சிரமமில்லாமல் பிடிக்க  பாலமேடு பேரூராட்சியினர் புதிய பாதையை அமைத்து சிறப்புடன் செய்து வருகின்றனர்.


மாவட்டஆட்சியர் வினய் உத்தரவின்பெரில் பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் மேற்பார்வையில் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார் முன்னிலையில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்தவருட ஜல்லிக்கட்டில் கூடுதலாக மாடுகளுக்கு 15 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கவும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குஆங்காங்கே தண்ணீர் தொட்டி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 மாடுகள் வெளியேறிச் சென்று மாட்டின் உரிமையாளர் பிடிப்பதற்கு ஏதுவாக பாலத்திற்கு கீழ் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு சாக்கடை கழிவுநீர் வெளியேற கோப்பைகள் அமைக்கப்பட்டு வருகிறது.


ஜல்லிக்கட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலமேடு பேரூராட்சி சிறப்பாக செய்து வருகிறது.ஜல்லிக்கட்டு


நடைபெறும் பகுதியில் இரண்டு அடுக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பார்வையாளர்கள் அமரும் கேலரி மற்றும் ஆங்காங்கே கழிப்பறை வசதி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.. ஜல்லிக்கட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலமேடு பேரூராட்சி இளநிலை உதவியாளர் அங்கையற்கண்ணி, துப்புரவு மேற்பார்வையாளர் கனகராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.