போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கான கருந்தரங்கம்

போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கருந்தரங்கம்.

 


 

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் கிளப் ஆப் நேருநகர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு கருந்தரங்கம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர்ஆர்.ரவிசங்கர் வரவேற்புரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்  தலைவர் சமூக சேவகர் த.ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர்  லயன் ஆர்.ஸ்ரீதரன், லயன் வி.லவக்குமார், லயன் ஆர்.செல்வராஜ், மண்டல தலைவர்  லயன் பி.சத்தியநாராயணன், மாவட்ட தலைவர் லயன் என்.சி.கே குமரன், வட்டார தலைவர் லயன் ஆர்.காமராஜ்,   லயன்ஸ் கிளப் ஆப் நேருநகர் தலைவர் லயன் கே.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக புனித தோமையர் மலை போக்குவரத்து உதவி ஆணையர் எஸ்.அன்வர்பாஷா, பல்லாவரம் போக்குவரத்து காவல்  ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு சாலை கடக்கும் போது சிக்னல்கள் பார்த்து நடந்து செல்ல வேண்டும் என்றும் பார்க்கமால் செல்லவதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் மற்றும் பள்ளி மாணவர்கள் போதைகளுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு எற்படும் வகையில் எடுத்து கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் S5 காவல் சிறார் மன்ற பொருப்பாளர்கள் டாக்டர் தி.பத்மநாபன், பி.எஸ்.பரணி, ஆசிரியர் மன்ற செயலாளர் கே.ஜெயமாலா மற்றும் சாய் பி. ஸ்ரீலதா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மாணவர்களுக்கு இலவச கால்குலேட்டர், கையேடுகள், பனியன்கள் ஆகியவை வழங்கப்பட்டது. நன்கொடையாளர்கள் தாம்பரம் தமிழ் நிதி நிறுவன இயக்குநர்கள், ஜெயலட்சுமி தர்மராஜன் தொண்டு நிறுவனம் இயக்குநர்கள், ரவி சாந்தி கட்டுமான நிறுவன இயக்குநர்கள், சேவா பாரதி, தமிழ்நாடு   ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக லயன் டி.பி சுவாமிநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினர்.