இந்துத்துவம் பேசுபவர்களை தோலுரித்து காட்டுவோம் - வீரமணி பேச்சு

எங்களுடைய ஆயுதம் முனை மழுங்க கூடிய ஆயுதமல்ல இது தந்தை பெரியார் தந்த அறிவாயுதம் இதனை வைத்து சாதி மத வெறியை எதிர்த்து போராடி வருகிறோம் இதனை மழுங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பாராட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி பேச்சு.


திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விடுதலை நாளேடு சந்தா வழங்கும் விழா திருப்பூர் ராயபுரம் பகுதியில் நடைபெற்றது இதில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இதனை அடுத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி எங்களுடைய ஆயுதம் முனை மழுங்க கூடிய ஆயுதம் அல்ல இது தந்தை பெரியார் தந்த அறிவாயுதம் இதனை வைத்து பெண்ணுரிமைக்கு எதிராகவும் சாதி மத வெறியை எதிர்த்து போராடி வருகிறோம் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார் மேலும் இந்துத்துவா பேசுபவர்களை தோலுரித்துக் காட்டுவதே எங்கள் வேலை ஒப்பனைகளை கலைத்துக் காட்டுவது எங்கள் வேலை முகமூடிகளை அகற்றி காட்டுவது எங்கள் வேலை இந்த நாட்டை காப்பாற்ற வேண்டுமானால் இந்த தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் மதவெறி நீங்கி மனிதநேயம் தழைக்க வேண்டும் என பேசினார்.