குடியரசு தின விழா ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!!

சென்னை: குடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு 20,22,23ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.


சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவு சின்னம் வரை காலை 6 முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றப்படுகிறது. அடையாறில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை வழியாக செல்லலாம். காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். ஆர்.கே சாலையில் காந்திசிலை நோக்கி செல்லும் பேருந்துகள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படும்.


சிவகாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் பேருந்துகள் அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம். ஆர்.கே சாலையில் காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும். வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வாகனங்கள் வர தடை விதிக்கப்படுகிறது.