திண்டுக்கல் புட்பால்: கே.எப் சி.,க்கு சுழற்கோப்பை!

 


தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியில் திண்டுக்கல் கேஎஃப்சி கால்பந்தாட்ட கழக


அணி முதலிடம் பிடித்து சுழற் கோப்பையை வென்றது. 


திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கேஎஃப்சி கால்பந்தாட்ட கழகத்தின் எட்டாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் தொடங்கியது. திண்டுக்கல் ,மதுரை ,அருப்புக்கோட்டை ,தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 56 அணிகள் பங்கேற்று விளையாடின. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கால்பந்தாட்ட போட்டிகள் நாக்-அவுட் முறையில் மின்னொளியில் நடைபெற்றது.
போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் கேஎஃப்சி அணியும் தேனி ஸ்போர்ட்ஸ் பெனடிக் அணியும் மோதின. இதில் திண்டுக்கல் கேஎஃப்சி அணி கடுமையாக போராடி 1:0  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சுழல் கோப்பை மற்றும் ரொக்கம் ரூபாய் 25 ஆயிரம் வென்றது. இரண்டாம் பரிசாக தேனி ஸ்போர்ட்ஸ் பெனடிக்ட் அணி சுழற்கோப்பை மற்றும் ரொக்கம் ரூபாய் 15,000, மூன்றாம் பரிசாக மதுரை தமிழ்நாடு போலீஸ் அணி கோப்பை மற்றும் ரொக்கம் ரூபாய் 10000 வென்றன.   16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான போட்டியில் போடி ஜெஎஃப்சி அணி  முதலிடம் பிடித்து கோப்பை மற்றும் ரொக்கம் ரூபாய் 3000 வென்றது. இரண்டாம் இடம் பிடித்த எம் எஸ் பி மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் இரண்டாயிரம்  பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் டி என் கலை கல்லூரி தாளாளர் ரத்தினம், மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் சண்முகம், ஹாக்கி சங்க புரவலர் காஜாமைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நடுவர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போட்டிகளை கண்டு ரசித்தனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் கேஎஃப்சி அணி ஒருங்கிணைப்பு செய்திருந்தது.


Previous Post Next Post