கோபிசெட்டிபாளையத்தில் நகர தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்கள் கோபி கட்சி மாவட்ட தலைமையகத்தில் அறிவிக்கப்பட்டனர்.

கோபிசெட்டிபாளையம் ,ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம் மற்றும் நகர தலைவர் கருத்து கேட்பது முடிந்து நகர தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்கள் கோபி கட்சி மாவட்ட தலைமையகத்தில் அறிவிக்கப்பட்டனர்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ,பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம் மற்றும் நகர தலைவர் கருத்து கேட்பது முடிந்து நகர தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்பட்டனர். இதற்கான கூட்டம் கோபி கட்சி மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பார்வையாளர்கள் சதீஷ்   புதிய மண்டல தலைவர்களை அறிவித்து பேசினார். கோட்ட அமைப்பு செயலாளர்  பாலக்குமார், கலெக்டர்  சித்திவிநாயகர், மாவட்ட பொது செயலாளர்  செந்தில்குமார்   ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தேர்தல் இணை அதிகாரி  வெங்கடாசலம் நன்றி கூறினார். மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.


புதிய மண்டல் தலைவர்களாக பவானி நகரம்- கண்ணன்,பவானி ஒன்றியம் தெற்கு  குழந்தைவேல்,பவானி ஒன்றியம் வடக்கு - கண்ணன்,அந்தியூர்  ஒன்றியம் வடக்கு - குமார்,கோபி நகரம் - மகேஸ்வரன்,கோபி ஒன்றியம் தெற்கு - நாகராஜ்,சத்தியமங்கலம் நகரம் - ஈஸ்வரமூர்த்தி,சத்தியமங்கலம் ஒன்றியம் தெற்கு - ராமசந்திரன்,பவானிசாகர்  ஒன்றியம் - நித்யானந்தர்,புஞ்சை புளியம்பட்டி நகரம் - காமராஜ்,பெருந்துறை நகரம் -  விஜயகுமாரர்,பெருந்துறை ஒன்றியம் தெற்கு - சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.