பாலம்  பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் அவதி!


இராணுவத்திற்க்கு  சொந்தமான நிலம் என்பதால் பத்தாண்டுகளுக்கு மேலாக அனகாபுத்தூர்-தரைப்பாக்கம் இணைக்கும்  அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த  பாலம்  பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் அவதி.

 


 

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் - தரப்பாக்கம் இடையே அடையாறு ஆற்றின் குறுக்கே புதிதாக கடந்த 2008 ம் ஆண்டு கட்டப்பட்டு வந்த பாலப் பணி இராணுவத்திற்க்கு சொந்தமான இடம் என்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பட்டு பாலம் கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்துக்கு வழி இல்லாமல் அடையாறு ஆற்றுப்பாலத்திற்க்கு கீழ் ஆபத்தான பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தமிழக அரசு இராணுவத்திற்க்கு மாற்று இடம் கொடுத்து பாலத்தை விரைவில் கட்டி தரவேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 
 

Attachments area