தூத்துக்குடி  கலெக்டர்  அலுவலகத்தில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

 தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்  கலெக்டர் சந்தீப் நந்தூரி  தலைமையில் நடைபெற்றது. 
             


தூத்துக்குடி மாவட்டத்தில் 26.01.2020 அன்று தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாநகராட்சியின் மூலம் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர்  வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும். அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் தயார்  நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழு மற்றும் 108 அவசர ஊh;தி தயார்  நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.  பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளி, மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திட வேண்டும். தியாகிகளை கௌரவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, மாணவ, மாணவியர்களை விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து திரும்ப அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நலத்திட்ட உதவிகள்  பெறும் பயனாளிகளின் பட்டியலை முன்கூட்டியே தயார்  செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும். மேலும், சிறப்பாக பணியாற்றும் அலுவலர்களை, பணியாளர்களை தேர்வு செய்து நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய நபர்களை குடியரசு தின விழாவில் கௌரவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் குடியரசு தினவிழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், தங்களது அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களையும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். குடியரசு தின விழா தொடர்பான பணிகளை அலுவலர்கள் தொய்வின்றி மேற்கொண்டு நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.