கொடிவேரி தடுப்பணையிலிருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறப்பு !!

கொடிவேரி தடுப்பணையிலிருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீரை திறப்பு. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு இரண்டாம் போக  பருவ சாகுபடிக்கு தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாய சங்கத் தலைவர் சுபி தளபதி பொது பனித்துறை உதவி பொறியாளர்கள் ஜி.செந்தில்குமார் ,கல்பனா உட்பட விவசாயிகள் அதிகாரிகள் கலந்து கொண்டு  தண்ணீரை திறந்து வைத்து மலா் தூவி வணங்கினா். தொடா்ந்து 120 நாட்கள் திறக்கப்படும் இந்நீாினால் கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூா் ஆகிய மூன்று தாலூக்காக்களில் 24504 ஏக்கா் நிலங்கள் நேரடி பாசனம் பெற்று பயன்பெறுகிறது.