விபத்துக்குள்ளான காரை மீட்டு அனுப்பிய போது மீண்டும் விபத்து : வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று திரும்பிய 3 பேர் உடல் நசுங்கி பலி 


கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த ஏழு  பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றனர்.  அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு, மதுரை, செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு இன்று அதிகாலை திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது, அவர்கள் வந்த சைலோ கார், தென்காசி மாவட்டம், சிவகிரி-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.வரும்போது  இன்று அதிகாலை 2.30 மணியளவில், அந்த பகுதியில் உள்ள மரத்தில் மோதி சைலோ கார் சேதமடைந்தது. அதில் வந்த 3 பேர் மட்டும், அந்த காரை மீட்டு ரெக்கவரி வேனில் அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த ரெகவரி வேனை வரவழைத்து, அதில் தங்களது காரை கட்டி இழுத்து செல்ல ரோட்டில் வைத்து ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தனர்.அந்த நேரத்தில் காலை 3 மணியளவில் கோவையில் இருந்து வந்த தனியார் சொகுசு பஸ், ரெக்கவரி பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் மூன்று ரெக்கவரி வேன் டிரைவரான சிவகாசியை சேர்ந்த ராஜசேகர், இன்னொரு சேகர் மற்றும் ஒருவர் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு அனுப்பி வைத்தனர். மேல் விசாரணை செய்து வருகின்றனர்.- கீழப்பாவூர் பிரமநாயகம்