போடி திருவள்ளுவர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் என்று பாராமல் அமைதியான வழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து போடி திருவள்ளுவர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்ட மசோதா வினை எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக போராடிவரும் இஸ்லாமியர்களை ஒடுக்க நினைக்கும் காவல்துறையினரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர வன்மையாகக் கண்டித்தும் அதற்கு பேர் ஆதரவாக இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். இஸ்லாமியர்கள் இந்திய மண்ணில் எங்கு தோண்டினாலும் அவர்களது சுதந்திர போராட்டம் ரத்தம் தென்படும் என்றும் இஸ்லாமியர்கள் இந்திய சுதந்திரத்திற்கும் இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கும் மாற்று சமூகத்தினரின் ஒற்றுமையை வலுபடுத்தியவர்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான NRC NPR CAA சட்டங்களையும் வாபஸ் பெற்று இந்திய இறையாண்மையை காப்பாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


Previous Post Next Post