45 வயதில் 28 வயது வாலிபருடன் கள்ளக்காதல்: உல்லாசம் அனுபவிக்கும் போது கையும் களவுமாக பிடித்து இருவரையும் வெட்டிக் கொலை செய்த பெண்ணின் கணவன்

 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர சண்முகம் (வயது58). இவரது மனைவி மாரியம்மாள் (வயது45). இவர்களுக்கு, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.


சண்முகம், கட்டிடத்தொழிலாலி, மேளம் அடிக்கும் பணியும் செய்து வந்ததாக தெரிகிறது.


சண்முகத்தின் எதிர்வீட்டில் வசிதது வந்தவர ராமமூர்த்தி (வயது28). இவர் அந்த ஊராட்சி வாட்டர் மேன்.அது தவிர பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.ராமமூர்த்தி ஊர் மக்களிடம் நல்ல பையன் என்ற பெயர் வாங்கியவர்.


இந்த நிலையில் சண்முகம் மனைவி, மாரியம்மாளுக்கும் ராமமூர்த்திக்கும் இடையே  கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும் சண்முகம் இல்லாத வேளையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.


இதைக் கண்டறிந்த சண்முகம், இருவரையும் கண்டித்துள்ளார். இது மாரியம்மாளின் கணவர் சண்முகத்துக்கு தெரியவர வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்துக்கு பிரச்சினைகள் வந்துள்ளது. 


அப்போது கணவர் வீணாக தன்னை சந்தேகப்படுவதாக மாரியம்மாள் கூறியுள்ளார். எனவே சண்முகத்தின் குற்றச்சாட்டு ஒரு பஞ்சாயத்திலும் எடுபடவில்லை. இதனால் சண்முகம் மனமுடைந்து தற்கொலைக்குக் கூட முயன்றுள்ளார்.ஆதாரத்துடன் தனது மனைவியின் கள்ளக் காதலை நிரூபிக்க முடிவு செய்தார் சண்முகம்.


 3 செல்போன்களை வாங்கிய சண்முகம், வீட்டிற்கு வந்து, வீட்டின் நேரெதிரில் உள்ள சிறிய கூடாரத்தில் ஒன்றையும் வீட்டருகில், தெர்மாகோலில் ஒன்றையும் வீட்டினுள்ளே ஜன்னலில் ஒரு செல்போனையும் மறைத்து வைத்துள்ளார்.சண்முகம் இல்லாத நேரங்களில் ராமமூர்த்தி வீட்டிற்கு வருவதும், இருவரும் உல்லாசமாக இருப்பதும் அந்த செல்போன்களில் பதிவாகியுள்ளன. இதை ஊர் பஞ்சாயத்தில் காண்பித்து மனைவியையும் ராமமூர்த்தியும் தண்டிக்க முடிவு செய்திருந்தார் சண்முகம்.


இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்து போதையில் உறங்கியுள்ளார் சண்முகம். சண்முகம் போதையில் தூங்கி கொண்டிருக்கும்போது  நள்ளிரவு1.30 மணியளவில் வீட்டிற்குள் வந்த ராமமூர்த்தி, மாரியம்மாளுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.


சத்தம் கேட்டு, துாக்கம் கலைந்து எழுந்த சண்முகம், அதிகாலை 3.00 மணியளவில் பார்த்தபோது மனைவியும் ராமமூர்த்தியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், அங்கிருந்த அரிவாளை எடுத்து, ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டிப் படுகொலை செய்தார். மேலும் தனது மனைவி மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார்.


இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாகக் கிடக்க, 14 கிலோ மீட்டர் துாரம் நடந்தே சென்ற சண்முகம், பசுவந்தனை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


சண்முகம் அங்கங்கே மறைத்து வைத்திருந்த செல்போன்களையும் போலீசார் மீட்டனர். சண்முகம் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.