சிவகிரி கூடலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
சிவகிரி கூடலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

 


 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சிவகிரி அருள்மிகு கூடலூர் மாரியம்மன் திருக்கோவில் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விகாரி வருடம் தை மாதம் 24ஆம் நாள் 7.2.2020 வெள்ளிக்கிழமை காலை 7.35 தொடங்கி 8.30 மணிக்குள் மிக சிறப்பாக நடைபெற்றது.

 


 

கும்பாபிஷேக விழாவை தலைமையேற்று சிவா கம ஞானபானு ஜி. சிவ ஞான குருக்கள் நடத்தி வைத்தார். இவ்விழாவில் சிவகிரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.