தூக்கநாயக்கன்பாளையத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட திறப்புவிழா
 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தையும், வாணிபுத்தூர் பள்ளத்தூரில் பகுதிநேர நியாய விலை கடையையும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்  இ.எம்.ஆர்.ராஜா  கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி  திறந்துவைத்தார். உடன் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் நவமணி கந்தசாமி, வாணிபுத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சு.சதாசிவம் இளநிலை உதவியாளர் டி .ஆர்.சரவணன்,பால் சொசைட்டி தலைவர் ரங்கநாதன், ராஜசேகர், வாணிப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் முனியப்பன், தென்றல் விஜய், சுஜாதா சுப்புராஜ் ,பம்பா வாசன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் டி. என். பாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் சாலை அமைக்க பூமி பூஜையிட்டு பணிகளை  துவக்கி வைத்தார்.