குரங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் - குரங்கு வேடமிட்டு வந்த தொண்டன்

 

 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள குரங்கணி சுற்றுவட்டார பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை எனவும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை குரங்குகள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாகவும் குரங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான தொண்டன் சுப்பிரமணி குரங்கு வேடமிட்டு குரங்கு போல பாவனை செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

 

இந்த நூதன போராட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.