நெல்லை டவுனில் வியாபாரிகள் சங்க தொடக்க விழா

நெல்லை மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நெல்லை டவுனில் வியாபாரிகள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

 


 

விழாவிற்கு திருநெல்வேலி மாவட்ட வர்த்தக கழக தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டு புதிய வியாபாரிகள் சங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்

 

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முருகன் என்ற காசி, செயலாளர் திரவிய ராஜா மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் ஆறுமுகம், உறுப்பினர் ராயல்ஸ்  சுப்பிரமணியன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.