அயோத்திக்கு  புனித செங்கல் யாத்திரை  இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் தீர்மானம்!!

அயோத்திக்கு  புனித செங்கல் யாத்திரை 

இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் தீர்மானம் 

 


 

திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் தமிழ்நாடு மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முத்தணம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மணடபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தலைவர் பிரகதீஸ்வரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்து மக்கள் நல இயக்க நிறுவனத்தலைவர் இளையராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பாலசுப்பிரமணியம், எல்.சதிஷ்குமார், செந்தில்வேல், மனோஜ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருக்கோவிலில் திருமணங்கள் பாதுகாத்தல், கோவில் ஆக்கிரமைப்புகள் அகற்றுதல், தாய் மதம் திரும்புதல் மதமாற்றம் தடுத்தல், சில இந்து கோவில்களில் வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதை கலெக்டரின்  கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வதென்றும்,

 

ராமர் தினத்தன்று ராமேஸ்வரத்தில் இருந்து 60 பேர் 60 புனித செங்கல் எடுத்து அயோத்திக்கு பயணிக்கவுள்ளதாகவும், மாவட்ட வாரியாக இந்து இளைஞர்கள் கவுரவ விளையாட்டு போட்டிகள் நடத்துதல், பெண்களின் கல்வி திறன் கலை திறன் மேம்படுத்துதல், அன்னதான முகாம், கோவில் திருவிழாக்களை முன்னின்று நடத்துதல் ஒரு வேளை கட்டளை இல்லாத கோவில்களை தத்தெடுத்து புனரமைத்தல், ஏழை குழந்தைகள் படிப்பு செலவை ஏற்று அவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு உதவுதல், புண்ணிய யாத்திரைகான வழிகளை சுலபமாக்குதல், உறுப்பினர் சேர்த்தல்,நகர, மாநகர, கிராமபுரங்ககளில் இயக்கத்தின் கொடி ஏற்றி வளர்ச்சி பணிகளை பரப்புதல், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.