கார் கவிழ்ந்து கேப்டன் டிவி செய்தியாளர் உள்பட இருவர் பலி

கோவை மாவட்டம்  


பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர்
சந்திரசேகர்.


இவர் பொள்ளாச்சிவ ஒன்றிய தேமுதிக செயலாளராக உள்ளார்.  மேலும் பொள்ளாச்சி பகுதி கேப்டன் டிவி  செய்தியாளராகவும் உள்ளார்.


சந்திரசேகர் தனது நண்பர்கள் பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்த
செந்தில்குமார் , பொள்ளாச்சி ராஜாா மில் ரோடு பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோருடன் தனது காரில் கோவை சென்று இருந்தார். வேண்டும் அவர் பொள்ளாச்சிக்கு திருப்பிிி வந்தார்.


வரும் வழியில் கார் கிணத்துக்கடவு 4 வழிச்சாலை பகுதியில் சாலைபுதூர் பகுதியில் வந்தபோது ரோட்டில் பரவிகிடந்த கருங்கல் ஜல்லிமீது கார் ஏறியதும் கார்நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த தடுப்புமீதுமோதி நடுரோட்டில்கார்கவிழ்ந்தது .


இதில் சந்திரசேகரும், கிஷோரும் சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமானார்கள் . செந்தில்குமார் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.


தகவல்அறிந்ததும்  சம்பவ இடத்திற்க்கு கிணத்துக்கடவு போலீசார்  சென்று விபத்தில் இறந்த 2  பேர் உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.