முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

 


 

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஐசக் மாதவராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லீமா வரவேற்றார். இதில் முன்னாள் பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் ஞானாம்பாள் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி மற்றும் நிர்வாகிகள் இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.