விருத்தாச்சலம் நகராட்சியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் குறித்து மத்திய மாநில அரசுகள் கொண்டுவந்த ஒருநாள் ஊரடங்கு உத்தரவு சிறப்பாக நடைபெற்றது இதையொட்டி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர்  பாண்டு (பொறுப்பு)  தலைமையில் மத்திய மாநில அரசு அறிவித்துள்ள கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஒருநாள்  ஊரடங்கு  உத்தரவு அனைத்து துறைகளிலும் நடைபெற்றது. இதையொட்டி  அரசுக்கு  நன்றி தெரிவிக்கும் விதத்தில்  மணியுடன் கைகட்டி நன்றி தெறிவிக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 


இதில்  ஆய்வாளர்கள் ,அரசு ஊழியர்கள், நகராட்சி, வட்டார வளர்ச்சி ஊழியர்கள்  துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.