இராசேந்திரபட்டினம் ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா துவக்க விழா

இராசேந்திரபட்டினம் ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா துவக்க விழா.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இராசேந்திரபட்டினம் ஊராட்சியில் குற்றங்கள் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமரா துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தலைமை காவலர்கள் சிவபெருமாள், கணேசன், ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதவி ஆய்வாளர் விநாயமுருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் அமிர்த லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு  கண்காணிப்பு கேமரா திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் மகேந்திரன் நன்றி கூறினார்.