கோபி வந்த வட மாநில தொழிலாளிகள் 2 பேருக்கு கொரோனா அறிகுறி

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி குடிநீா் திட்டப்பணிக்காக ஜாா்கண்ட் மற்றும் மேற்குவங்கம் மாநிலத்திலிருந்து நேற்று முன்தினம்  கோபிசெட்டிபாளையம் வந்துள்ள 24 வடமாநில தொழிலாளா்களை வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் டாக்டர்.மோகன்குமார், செவிலியர் முத்துகுமார் ஆகியோர்   கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என தனிமைப் படுத்தி  பரிசோதனை செய்யப்பட்டனர். பரிசோதனையில் இருவருக்கு அறிகுறி தென்பட்டதன் அடிப்படையில் கோவை அரசு  மருத்துவ மனைக்கு ஒருவரும், பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கும்  அனுப்பிவைக்க பட்டனர். மீதமுள்ள 22பேருக்கும்  தனி முகாம் அமைக்க பட்டு 28நாட்களுக்கு மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளனர்.  மேலும் இந்த ஆய்வு குழுவில்  வருவாய்த்துறையினா் மற்றும் காவல்துறையினரிடம்  விசாரணை நடத்திவருகின்றனா்.    உடன் கோட்டாட்சியர் ஜெயராமன், கோபி காவல் ஆய்வாளர் சோமசுந்தரம்,வட்டாச்சியர் சிவசங்கர்,  நிலவருவாய் அலுவலர் ரஜிகுமார், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.