வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி : தாய், தாத்தா பிணத்துக்கு 3 நாட்கள் காவல் காத்த 17 வயது சிறுவன்!

திருப்பூரில் வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி - ஊரக காவல் நிலைய போலீசார் விசாரணை...


 


வீடியோ இதோ: திருப்பூர் அடுத்த ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் வசித்து வருபவர் அபர்ணா இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அபர்ணா கடந்த சில வருடங்களாக ராக்கியாபாளையம் பிரிவில் தனது தந்தை வெள்ளியங்கிரி மற்றும் மகன் ஜித்தின் என மூன்று பேரும் வசித்து வந்துள்ளனர். அபர்னாவின் தாய் சுமார் 6 மாதங்களுக்கு முன்பாக இயற்கை மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இறுதிச்சடங்கு செய்வதற்கும் கையில் பணமில்லாமல் கஷ்டப் பட்டதாகவும் இதனால் அவரது தாயின் உடலை அடக்கம் செய்ய அக்கம்பக்கத்தினர் பணம் கொடுத்து உதவி செய்த அவருக்கு இறுதிச்சடங்கு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது முதலே மனமுடைந்த அபர்ணா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக இறந்துவிட்டதாகவும் அதைக்கண்ட அபர்ணாவின் தந்தை வெள்ளியங்கிரி தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும் இந்த இரண்டு மரணங்களையும் நேரில் பார்த்த ஜித்தின் என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று நாட்களாக இறந்த உடல்களை பார்த்துக்கொண்டும் இருந்ததாக தானாகவே தனது உறவினருக்கு அலைபேசியில் தெரிவித்துள்ளார். பின்னர் தானும் பல வழிகளில் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என உருக்கமாக பேசியுள்ளார். பின்னர் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த உறவினர்கள் விரைந்து வந்து பார்க்கும் பொழுது வீடு முழுவதும் வீட்டைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசியுள்ளது பின்னர் உறவினர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், ஜித்துவும் தூக்கு மாட்டி தற்கொளை செய்தது தெரிய வர ,  3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.