கடலூர் கலெக்டர் வீட்டில் 55 பவுன் நகைகள் கொள்ளை

கடலூர் கலெக்டர் வீட்டில் 55 பவுன் நகைகள் கொள்ளை.


கடலூர்  மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வீட்டில் 55 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நாடியம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் ஐஏஎஸ் அதிகாரியான இவர் தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக பணி செய்து வருகிறார்.
குடும்பத்தினருடன் கடலூரில் தங்கியுள்ளனர்.


பேராவூரணியில் உள்ள வீட்டில் யாரும் இல்லாததால் செல்வம் என்ற காவலர் நியமிக்கப்பட்டிருந்தார்.


வீட்டில் யாரும் இல்லாமல் வாட்ச்மென் மட்டும்  இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டின் பின்பக்கமாக நுழைந்து கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் உள்ள பீரோவை உடைத்து 55 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



இன்று காலை வாட்ச்மென்  வழக்கம்போல் வீட்டிற்கு பின்புறம் சென்று பார்வையிட்டபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.


உடனடியாக இதுபற்றி கடலூரில் உள்ள ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.


அதன் பேரில் அவர் தனது குடும்பத்தினருடன் பேராவூரணி  புறப்பட்டு தனது வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பற்றி பேராவூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.


அதில் தனது வீட்டு பீரோவில் 55 பவுன் நகைகள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.


இதன்பேரில் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Previous Post Next Post