கொரோனா அறிகுறி தென்பட்டால் கைகளில் சீல் குத்தி தனிமைப்படுத்தும் பணி

மும்பை மாநில அரசு கொரோன அதடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. ருவாண்டா சென்ற மும்பை பயணிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, மும்பை சுகாதாரத்துறை முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளது.


இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.


மும்பையில் விமான நிலையங்களிலும் ( கோவிட்-19 அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள்) மருத்துவமனைகளிலும் கோவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களின் இடது கைகளின் மேல்பக்கம் குவாரண்டைன் என்ற  சீல் குத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதுஅதில் எத்தணைநாட்களுக்கு தனீமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சீல் குத்தப்பட்டிருக்கிறது


தனிமைப்படுத்துவதற்கு உட்படுத்தப்பட்டவர்கள் பொதுவெளியில் கலப்பதை பொதுமக்களும் மருத்துவர்களும் உறுதி செய்து கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


சாதாரண கொரோனா தொற்றுக்கு தனிமைபடுத்தலே போதுமானது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.