கோழி சூப் சாப்பிட்டு கொரோனாவில் இருந்து மீண்ட 60 வயது பெண் டாக்டர்! யாருப்பா அது, கோழில கொரோனா பரவுதுன்னு கிளப்பி விட்டது?

சிக்கன் சூப், பாராசிட்டமால் மாத்திரை, லெமன் ஜூஸ் ஆகிய மூன்றையும் சாப்பிட்டே கொரோனாவின் கொடூர பிடியில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் 60 வயது பெண் டாக்டர் கிளேர் ஜெரடா. இவர் சிக்கனில் உள்ள இயற்கையான பென்சிலின் தன்னை காப்பாற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.


பிரிட்டனில் உள்ள தெற்கு லண்டன், கென்னிங்டன் பகுதியை சேர்ந்தவர் கிளேர் ஜெராடா, இவர் ஒரு டாக்டர். ராயல் கல்லூரியின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்லார். நியூயார்க்கில் இருந்து லண்டன் திரும்பிய போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 


நோய்த்தொற்றால் சில நாட்கள் படுத்த படுக்கையாகி விட்டார். அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டது, 


நடுக்கம், உடல் வெப்பம், உடல் அசதி, மூட்டுக்களில் வலி, தலைவலி, நெஞ்சுவலி, வறட்டு இருமல், தொண்டை புண் என பல சோதனைகளை தாங்கிய பின்னர் தான் மீண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார் அவர். 


கொரோனாவால் அவதிப்பட்ட போது, தன் முன்னால் கிடந்த 50 யூரோ கரன்சியை கூட எடுக்க முடியாத அளவுக்கு வலிமையிழந்து கிடந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். 


மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையானவர்கள் மீண்டு வருகையில், தனக்கு மரணம் ஏற்படப்போவதில்லை என தேற்றிக்கொண்டாராம். 


102 டிகிரி காய்ச்சல், தொண்டையில் கத்தி வைத்து குத்தியது போல ஏற்ப்பட்ட புண், வறட்டு இருமல் என அவதிப்பட்டேன். ஆனால் எனக்கு கடவுளின் பென்சிலின்  நிறைந்து இருக்கும் சிக்கன் சூப் தான் மீண்டு வர உதவியது என்றார் அவர். மேலும் லெமன் ஜூஸ் மற்றும் வேளைக்கு இரண்டு பாராசிட்டமால் மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டதாக கூறி உள்ளார். 


ஐந்து ஆறு நாட்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்த அவர், கொரோனா தனக்கு வாயில் கசப்பை மட்டும் விட்டு விட்டு சென்றதாகவும் கூறி உள்ளார். 


தற்போது பூரண குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


நம்ம ஊரில் கோழி சாப்பிட்டால் கொரோனா வரும் என ஊரே வதந்தியால் பயந்து கிடக்கும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்ட 60 வயது பெண் டாக்டர் கிளேர் ‘கோழி சூப்பில் உள்ள பென்சிலின் தான் தன்னை காப்பாற்றி உள்ளது’என கூறி உள்ளார். 


ஆக கொரோனாவை வயதானவர்களும் வெல்ல முடியும் என்பதற்கு வாழும் உதாரணம் தான் கிளேர் ஜெராடா 


வாட்ஸ் அப் வதந்திகளுக்கு முற்ற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டிய தருணம் இது மக்களே!


Previous Post Next Post