வீடின்றி தவிப்பவர்களுக்கு உணவு... வட்டாட்சியர் பகவதி பெருமாள் வழங்கினார்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்   ஷில்பா பிரபாகர் சதீஷ்  வழிகாட்டுதலின்படி  கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சாலையோரம் திரியும் ஆதரவற்றவர்கள்,  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி தவிப்பவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கணக்கிடப்பட்டுள்ளனர். இவர்களை சாலைகளில் இருந்து மீட்டு முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணி இன்று துவங்கப்பட்டது. முதற்கட்டமாக 75 பேரை  நெல்லை டவுண் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே முகாமில் தங்கியுள்ள நபர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் எந்த ஒரு தொடர்  பும் இல்லாதவாறு பிரித்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு காலை மதியம் இரவு என உணவும், இரண்டு வேளைகள் டீ காபி பிஸ்கட் பொருட்களும் உண்ண முடிவு செய்யப்பட்டுள்ள து. இதற்காக 10 தன்னார்வலர்கள் இந்த பணியில் இருக்கின்றனர்.பொருட்களை திருநெல்வேலி வட்டாட்சியர் பகவதி பெருமாள், தனி வட்டாட்சியர் ரகமத்துல்லா உள்ளிட்ட பலர் வழங்கினர்


Previous Post Next Post