திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் வாலிபர் அனுமதி

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 14 படுக்கைகள் உடன் கூடிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போளூர் அருகே உள்ள அணியாலை மங்கலம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் சலி உள்ளது. அவர் மூச்சுவிட சிரமமாக உள்ளதாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக அவரை உறவினர்கள் தி.மலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனிமைப் படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் இந்த வாலிபருக்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதா? என்பதை அறிய ரத்த மாதிரி எடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை முடிந்தவுடன்தான் அவருக்கு சாதாரண காய்ச்சல் உள்ளதா? கொரோனா வைரஸ் தொற்றதா? என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெறும் வாலிபரை சிறப்பு மருத்துவ குழுவினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்றுவரும் இந்த வாலிபர் கட்டிட மேஸ்திரி ஆவார். இவர் காய்ச்சலுக்காக பெங்களூருவிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற போது டாக்டர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரிவித் துள்ளனர். இதையடுத்து சொந்தஊர் திரும்பிய அவரை உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் மேலும் தி.மலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.