கால்நடை துணை மருத்துவ மனையை எம்எல்ஏ, கலைச்செல்வன்  திறந்து வைத்தார்.


வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமத்தில் கால்நடை துணை மருத்துவமனையை எம்எல்ஏ, கலைச்செல்வன்  திறந்து வைத்தார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் கால்நடை துறை மருத்துவமனையை எம்எல்ஏ கலைச்செல்வன் திறந்து வைத்தார். விழாவிற்கு, நல்லூர் ஒன்றிய செயலாளர்  பால்வள மாவட்ட சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். கால்நடை  துணை இயக்குனர் பொன்னம்பலம், உதவி இயக்குனர் பிச்சை பாபு முன்னிலை வகித்தனர். மாளிகைமேடு  ஊராட்சி மன்ற  தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில்  விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கால்நடை துணை மருத்துவமனையை திறந்து வைத்தார். இதில், அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் துரைசாமி, முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர்  மதியழகன், பா.கொத்தனூர் ஊராட்சி தலைவர் முனியன்  உள்பட  பலர் கலந்து கொண்டனர்.