கோபியில் 8 டன் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பறிமுதல்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தெப்பக்குளம், கடைவீதி பகுதியில் வருவாய்துறை, காவல் துறை,  உணவு பாதுகாப்புதுறை, நகராட்சி சுகாதாரத் துறை ஆகியோர் இணைந்து நடத்திய   சோதனையில் தமிழக அரசால்  தடை செய்யப் பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட  புகையிலை பொருட்கள், ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் டம்ளர், நெகிழி பைகள் உட்பட நான்கு லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பொருட்களை பதுக்கிய குடோன் உாிமையாளா்கள் லக்ஷ்மி ஸ்டோர் ராஜேந்திரசிங்கிடம் 90 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களும், கெளரி ஸ்டோர் கங்கா சிங்கிடம் ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களும், திருநெல்வேலி மளிகை கடையில் 5 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களும், லஷ்மி ஸ்டோர் ராஜீ சிங்கிடம் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் வைத்திருந்தோர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று குடோன்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

வருவாய்த்துறை,  உணவு பாதுகாப்புத்துறை,  நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை ஆகியோா் இணைந்து நடத்திய சோதனையில் வடமாநில வணிகா்களின்  குடான்களில் பதுக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உட்பட  ஒரு லட்சம் நாற்பத்தைந்து ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களும், சுமாா் 8 டன் மதிப்பிலான அரசால் தடைசெய்யப்பட நெகிழிப்பொருட்களும் பறிமுதல் செய்து  அதிகாாிகள் ஐந்து  குடோன்களுக்கும் சீல் வைத்து உாிமையாளா்களுக்கு அபராதம் மற்றும் வழக்கு பதிவும் செய்துள்ளனா். வருவாய் துறையை சார்ந்த வட்டாசியர் சிவசங்கர், நில வருவாய் அலுவலர் ரஜிக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ரவிக்குமார், நடராஜ், மாதேஸ்வரன், காவல் துறை சார்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமணவேந்தன், லோகு, உணவு பாதுகாப்பு துறை சார்ந்த குழந்தைவேல், கோடிஸ்வரன், நகராட்சி சுகாதாரத் துறையை சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், கார்த்திக், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஜயன், பூங்கொடி, சக்திவேல், பழனிச்சாமி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.நான்கு துறை சேர்ந்து நடத்திய மாஸ்ரைடுவை கோபி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருவதோடு இச் சோதனை தொடர்ந்து நடந்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

Previous Post Next Post