கொரோனாவை விரட்ட வேப்பிலை அரைச்சு.. மஞ்சள கரைச்சு.. ஊரெல்லாம் தெளித்த இளைஞர்கள்

கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை பல்லாவரம் பான்ஸ் சிக்னல் அருகில் உள்ள காமராஜ் நகர் பகுதி இளைஞர்கள் அப்பகுதி முழுவதும் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளித்தனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, செங்கல்பட்டு
 மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, சுகாதாரத் துறை, நகராட்சி சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் காமராஜ் நகர் இளைஞர்கள் ஊர் பொது மக்களின் நலன் கருதி தானாக முன்வந்து பல லிட்டர் தண்ணீரில் கிரிமி நாசினியாக இருக்கக்கூடிய மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை அரைத்து தண்ணீரில் கலந்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீட்டு வாசல்களிலும் தெளித்து வந்தனர்.