கொரோனா ஊரடங்கு: வீட்டில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள்

மக்கள் ஊரடங்கு நாளான இன்று பழனியில் மண்டபத்தில் நடைபெற இருந்த திருமண விழாவை ரத்து செய்து விட்டு, திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் ஒரு சில உறவினர்களுடன் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார் திருப்பூரை சேர்ந்த லேபிள் கம்பெனி உரிமையாளர் ஒருவர். 


வீடியோ இதோ: 




திருப்பூர் பூச்சக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி - குமுதம் மகன் யுவராஜ். பனியன் லேபிள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கும், திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் -இந்திராணி ஆகியோரின் மகளான பட்டதாரிப்பெண் திவ்யபாரதி ஆகியோருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று பழனி அடிவாரத்தில் சன்னதி வீதியில் உள்ள வெள்ளாஞ்செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக உறவினர்களுக்கெல்லாம் பத்திரிகை அச்சிட்டு கொடுத்து அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் மக்கள் ஊரடங்கு இன்ரு கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி இந்த திருமண விழாவுக்கு அழைக்கப்பட்ட அனைவரையும் வரவேண்டாம் என்று தகவல் சொல்லி விட்டு, போயம்பாளையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் அவசர அவசரமாக காலை 6 மணிக்குள் திருமணத்தை நடத்தப்பட்டது. இதற்காக மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் மட்டும் வந்து அவசர கதியில் திருமணம் முடிக்கப்பட்டது.  600 பேருக்கு மேல் திருமணத்துக்கு வர வேண்டிய நிலையில், பத்திரிகையில் பெயர் போடப்பட்ட உறவினர்கள் கூட எங்கள் திருமணத்துக்கு வரவழைக்க முடியவில்லை என்று சற்று வருத்தம் இருந்தாலும், எளிமையாக திருமணம் நட்த்தி மக்கள் ஊரடங்கில் பங்கேற்கிறோம் என மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 


Previous Post Next Post