செங்கத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை திறக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலை மற்றும் கட்சியின் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக ஒன்றிய மகளிரணி துணை செயலாளர் சகிலா செய்திருந்தார். நேற்று சிலை திறப்பு விழா மற்றும் கொடியேற்றுவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சிலை வைக்கவும் பெயர் பலகை வைக்கவும் அனுமதி பெறவில்லையாம். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி சிலை திறப்புவிழா நடத்துவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.