போலீஸ் நிலையத்தில் கோரொனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை!தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார் மேற்பார்வையில் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஜன்னல், கதவு, கைப்பிடி மற்றும் அங்கு போலீசார் பயன்படுத்தும் வாகனங்களிலும் வைரஸ் நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அத்துடன் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து வார்டுகள் மற்றும் உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலவேசம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்